50 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம் குறித்து தன்னுடைய அரசியல் லாபத்திற்காக ரஜினிகாந்த் பேசி வன்முறையை தூண்டிவிட்டுள்ளார் .

நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திராவிட விடுதலை கழக சென்னை மாவட்ட தலைவர் உமாபதி என்பவர் ரஜினிக்கு எதிராக புகார் அளித்தார்.


அவர் தனது புகாரில், ரஜினிகாந்த் பெரியார் பற்றி பொய்யான தகவலை பரப்பி பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளார் , பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசி உள்ளார்.


அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி சென்னை எழும்பூர் 2வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் உமாபதி வழக்கு தொடர்ந்தார்.


உமாபதியின் மனு, நீதிபதி ரோஸ்லின் துரை முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உமாபதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், துக்ளக் இதழில் ராமர் சீதை சிலைகள் நிர்வாணமாக கொண்டு சென்றது தொடர்பாக எந்த ஆதார புகைப்படமும் இல்லை.


50 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம் குறித்து தன்னுடைய அரசியல் லாபத்திற்காக ரஜினிகாந்த் பேசி வன்முறையை தூண்டிவிட்டுள்ளார் .