இந்த மேட்ச்சில் ஜெயித்தால்.. அடுத்து பைனல் தான்.. கோவாவுடன் மீண்டும் மோதும் சென்னையின் எஃப்சி

கோவா :


ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் மூன்றாம் அரையிறுதி ஆட்டம், கோவா எஃப்சி மற்றும் சென்னையின் எஃப்சி அணிகள் இடையே நாளை நடைபெறுகிறது. ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்கின் வெற்றியாளரை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கப் போகும் இந்த போட்டி, கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடிய‌த்தில் சனிய‌ன்று நடக்கிறது.


கடந்த சனிக்கிழமையன்று சென்னையில் நடைபெற்ற அரையிறுதி சுற்றின் முதல் போட்டியில் சென்னையின் எஃப்சியிடம் 4 க்கு 1 என்ற கோல் கணக்கில் மண்ணைக் கவ்விய எஃப்சி கோவா, நாளை தனது சொந்த மண்ணில் ஆட்டம் நடைபெறுவதால் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. சென்னையின் எஃப்சியோ, தனது வெற்றியை தக்க வைத்துக் கொள்ள மும்முரமாக உள்ளது.