கொரோனாவால் 28 சதவீத சொத்தை இழந்தார் முகேஷ் அம்பானி

மும்பை: கொரோனாவால் ஏற்பட்ட பங்குச்சந்தை சரிவால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தனது சொத்து மதிப்பில் 28 சதவீதம் இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் சாதாரண மனிதர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. உலகில் உள்ள பெரும் கோடீஸ்வரர்களும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

அந்த வகையில் உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால் கடந்த 2 மாதங்களில் 28 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன